| இத்தாலி, பலெர்மோவில் மாவீரர் வணக்க அஞ்சலியும் திருப்பலியும் |
[ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 10:40 AM] [ ] |
தமிழீழ தேசத்தின் விடிவிற்காய் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களையும், சிங்கள இனவாத அரசபடையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து இத்தாலி, பலெர்மோவில் நேற்று அஞ்சலி நிகழ்வு நடாத்ததப்பட்டது. [மேலும்] |
| தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யக்கோரிய 10 புதிய அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 09:12 AM] |
கடந்த சில தினங்களில் தேர்தல் திணைக்களத்தில் பத்து புதிய அரசியல் கட்சிகள் பதிவுசெய்யக்கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவ்விண்ணப்பங்கள் யாவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
|
| சூரிச் கூட்டம் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும்' என்ற கருத்தரங்கின் போது சலசலப்பு |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 07:52 AM] |
சுவிஸ் நாட்டின் தலைநகர் சூரிச்சில் தமிழர் தகவல் மையம் ஏற்பாடு செய்துள்ள "இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும்' என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கின் போது சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி தனித்து போட்டியிடத் தீர்மானம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 05:00 AM] |
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு தரப்பிலும் கட்சித் தாவல்கள் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 04:43 AM] |
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு கட்சிகளிலும் கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை: மனோ கணேசன் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 04:39 AM] |
முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[மேலும்] |
| யுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 04:36 AM] |
யுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| எதிர்வரும் தேர்தல் கண்காணிப்பாளராக ஐ. ஒன்றியப் பிரதிநிதிகள் செயலாற்ற தடை: அரசாங்கம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 03:56 AM] |
எதிர்வரும் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகளை செயலாற்ற அழைப்பதில்லை என்று அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விடய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. [மேலும்] |
| ஏனைய இராணுவத் தளபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை: சரத் பொன்சேகா |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 03:47 AM] |
கடந்த காலங்களில் இராணுவத் தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய நபர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர் காணலில் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| அரசாங்கத்துடன் இணைந்தால் பிரதமராக்குவதாக எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு உறுதிமொழி |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:58 AM] |
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்கவை, அரசாங்க கட்சிக்குள் இணைத்துக்கொள்ள பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காக பல்வேறு மட்டத்திலும் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| பாதுகாப்புத் தேடி கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை அரவணைத்த அரசை அவர்கள் மறக்கக் கூடாது என்கிறார் பசில் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:34 AM] |
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த மக்களை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வரவேற்று அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதனை அவர்கள் மறந்து விடக் கூடாதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சூரிச் கூட்டம் தொடர்பான முடிவுகள் கூட்டறிக்கையாக இன்று வெளியிடப்படும்: டக்ளஸ் தேவானந்தா |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:28 AM] |
சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் சூரிச்சில் நடைபெற்று வரும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கூட்ட முடிவுகள் தொடர்பான கூட்டறிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
|
| ஐ.தே.க.வின் கூட்டத்திற்கு கல்வீச்சு; கூச்சலிட்டு குழப்பம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:08 AM] |
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வட கொழும்பு ஐ.தே.க. அமைப்பாளருமான ரவி கருணாநாயக்கவின் கூட்டத்தில் இனந்தெரியாத குழுவொன்றினால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகவும் தெவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சரத் பொன்சேகா பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மனு தாக்கல்: தேர்தல் அலுவலகமும் திறப்பு |
| [ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 01:56 AM] |
முன்னாள் கூட்டுப்படை தலைமையதிகாரி, சரத் பொன்சேகா இந்த வாரத்தில்,உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தவேண்டும் எனக் கோரியே இந்த மனு தாக்கல்செய்யப்படவுள்ளது. [மேலும்] |